பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7? உள் உணர்வு, மெய்தான என்று ஏற்பது பெரிய விஷயம். கடந்த ஞானிகளுக்கெல்லாம் எட்டாத ஒன்றை, இயல் பாகவே பெற்றுவிடுவது ஒர் அரிய சாதனைதான். யோகி களுக்கு சகஜ சமாதி என்ற நிலை வரப்பெற்ருல் இதல்ை பலகோடி மக்கள் பயன் பெறுவார்கள் என்பது நமது சித்தாந்தம். ஆனால், அந்த ஸ்கஜ சமாதி நிலை அடையப் பெற்றவரா அல்லது எல்லாம் தானகவே அறிவு கூறு கின்றது, அதை இக்கவிதையிலே சொல்லுகின்ருரா என்பது ஆராய்வதற்குரியது. நானே ப்ரம்மம் என்று சொல்வது எளிது. ஆனல் அதை உண்மையாகவே உணர்வது அரிது. இதுபற்றி முன்னுரையில் விரிவாக ஆராயும் நோக்க முடையேன். ஆதலின் இத்துடன் நிறுத்திக் கொள் கிறேன்.) இரட்டைக்குறள் வெண் செந்துறை வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்: மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்; கானிழல் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான். I விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான் வெட்ட வெளியின் விரிவெலாம் நான், மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான், வாரியி லுள்ள உயிரெலாம் நான். 2 கம்ப னிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உருவெலாம் நான்: இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான். &