பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இன்னிசை மாத ரிசையுளேன் நான்; இன்பத் திரள்கள் அனைத்துமே நான்: புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்: பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4 மந்திரங் கோடி இயக்குவோன் நான், இயங்கு பொருளின் இயல்பெலாம் நான், தந்திரங் கோடி சமைத்துளோன் நான், சாத்திர வேதங்கள் சாற்றினேன் நான். 5 அண்டங்கள் யாவையும் ஆக்கினேன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான்: கண்டநற் சக்திக் கணமெலாம் நான், காரண மாகிக் கதித்துளோன் நான். 6 நானெனும் பொய்யை நடத்துவோன் நான்; ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான் ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்ருய் அறிவாய் விளங்குமுதற் சோதிநான்! 7 32. பக்தி (குறிப்பு : பட்டினி கிடந்தாலும் கிடக்கலாம். ஆனல் பக்தியை விடாதே என்று பாரதியார் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிரு.ர். பக்தியினுல்தான் கொடிய வறுமை யையும் சமாளித்து நிற்கக்கூடிய வலிமை ஏற்படுகின்றது. பக்தியினல் சோர்வுகள் போகும்; கல்வி வளரும்; சோம்பல் அழியும் என்று, இவ்வாறு பக்தியின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகிருர் பாரதியார். காந்தி அடிகளுக்கு ராமனுடைய நாம ஜபத்தாலேயே, அளவற்ற பலம் கிடைத்திருக்கிறது என்பது இங்கே கவனித்தக்கது.)