பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

visi இத்தகைய உண்மைகளை யெல்லாம் இந்த நூலிலுள்ள கவிதைகளும் க ட் டு ைர க ளு ம் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொன்றின் தொடக்கத்திலும் அன்பர் திரு. தூரன் அவர்கள் சிறிய குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிருர், பாரதியாரின் உள்ளக் கிடக்கையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுபவை அந்தக் குறிப்புகள். இந்த நூல் பாரதியாரின் கடவுளுணர்வைத் தனியே எடுத்துக் காட்டும் கண்ணுடி அவர் கவிதையில் அந்த உணர்வு எப்படியெல்லாம் புகுந்து விளையாடுகிறது என்பதைப் புலப் படுத்தும் ஒவியம். வாழ்க திரு தூரன்: அவர் முயற்சிகள் வெல்க! 'காந்தமலை’ } 25-2-81 கி. வா. ஜகந்நாதன்