பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. முருகன் பாட்டு (குறிப்பு: உள்ளத்தே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றபடி இது ஒளிபெற்ற பாடல்களில் ஒன்ருகும். பாரதியார் பாடும்போது நேரில் கேட்கும் பாக்கியம் பெறவில்லை. ஆனல் அவருடைய மாமாவான ஒரு பெரியவர் பாட்டைப் பாட நான் கேட்டு மகிழ்ந்திருக் கிறேன். அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு என் மகிழ்ச்சி யைத் தெரிவித்தபோது, "பாரதியார் பாடலை அவர் வாயாலே கேட்டிருக்க வேண்டும். நான் பாடியது நூறில் ஒருபங்குகூட அதற்குச் சமானமாகாது" என்று உள்ளம் நெகிழ்ந்து சொல்லுவார். பாரதியார் பாடும்போது நெருப்புப்பொறிபறக்குமாம். அத்தனை அழகான பாடல் இது. சுமார் இருபது பேர் கூட்டமாக உணர்ச்சியுடன் பாடினல், ஆவேசமே வந்துவிடு மாம்.) பல்லவி முருகா!-முருகா!-முருகா! சரணங்கள் 1. வருவாய் மயில் மீதினிலே வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா) 2. அடியார் பலரிங் குளரே; அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே! அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே (முருகா)