காங்கிரசில் பாரதி கங்காநதியின் ஓரத்திலே, அழகிய ராஜகிரிக்குன்றலின் சாரலிலே மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட்ட பந்தலில் 1905 டிசம்பர் 27,28,29,30 ஆகிய நாட்களில் காசிநகரில், காங்கிரஸ் மகாசபையின் 21வது கூட்டம் பண்டித விஷம்பரநாதர் பிரேரணை செய்ய, ராமேசசந்திரதத்தரும், ஜி.சுப்பிரமணிய அய்யரும் ஆமோதிக்க பிரபல தேசாபிமானியாகிய கோபாலகிருஷ்ணகோகலே அக்ராசனஸ்தானத்தில் அமர நடைபெறத் துவங்கியது. ஜி. சுப்பிரமணிய அய்யரின் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணையாசிரியராகப் பொறுப்பிலிருந்த பாரதியும், அந்தப் பத்திரிகையாளர் என்ற முறையில் காங்கிரஸ் மகாசபைக்கு தனது பத்திரிகையின் ஆசிரியருடன் கலந்து கொண்டார். 13 . 1905ல் கயாகாங்கிரசில் சுதேசமித்திரன் செய்தியாளர் என்ற தகுதியில் பாரதிகலந்து கொண்டார். " காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று திரும்பும் வழியில் பாரதி அல்மோடாவில் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். "ஸ்வதேசபக்தி உபதேசம் புரிந்தருளிய குரு" என்று 1905 ஆம் ஆண்டின் இறுதியில் நிவேதிதாதேவியை சந்தித்தது பற்றி பாரதியே குறிப்பிடுகிறார். அதே வேளையில் பூனாவில் லோகமான்ய பாலகங்காதர திலகரையும் சந்தித்து அரசியல் விஷயங்களை ஆலோசித்து திரும்பியவர் பாரதி. இந்தியா பத்திரிகையில் பாரதி "இந்தியா' வார இதழ் மண்டயம் குடும்பத்தைச்சேர்ந்த எஸ்.என்.திருமலாச்சாரியாரால் சென்னையில் தொடங்கப்பெற்றது. அதன் முதல் இதழ் 9 மே 1906இல் வெளிவந்தது. இதற்கு கொஞ்ச காலத்திற்குப் பிறகு பாரதி அதன் நடைமுறை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 15 இக்காலம் தொடங்கியே தெளிவாக அரசியல் நிலைப்பாட்டை நாம் பாரதியிடம் காண்கிறோம். தேசியக்கட்சி, தீவிரவாதக்கட்சி, புதிய கட்சி என்று கூறப்படும் பிரிவினரின் கருத்துக்களை கட்டுரைகளாகவும், 13. காங்கிரஸ் மகாசபை சரித்திரம், இரண்டாம் பாகம் - சென்னை சுதேசமித்திரன் லிமிடெட் வெளியீடு. 1929, பக் 1. 14.காங்கிரஸ் நூற்றாண்டு விழா மலர் சென்னை 1985, பக் 233. 15.ஆ.இரா. வேங்கடாசலபதி, பாரதியின் கருத்துப்படங்கள், 1994 பக் 25. 11
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை