வி.சங்கரன், பி.ஏ. தலைமை வகித்த கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ண அய்யங்காரால் பிரேரேபிக்கப்பட்டு, என். ராகவாச்சாரியால் ஆமோதிக்கப்பட்டு ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி ஸ்ரீ எம். நரஸிம்மம், வி.நரஸிம்மம்,ஆர்.ஸபாபதி ஆகியோர் டெலிகேட்டுகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். சென்னை மாகாணத்திலிருந்து வக்கீல் வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் மிதவாதகோஷ்டியினரும், பாரதியார்தலைமையில் தீவிரவாத கோஷ்டியினரும், கல்கத்தா காங்கிரஸிற்குச் சென்றனர். கல்கத்தா காங்கிரஸ் 1906 கல்கத்தாவில் பவானிபூரிலுள்ள ரஸ்ஸாரோடுக்கு சமீபத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமானபந்தலில் 1906 டிசம்பர் 26ம்தேதி 1633 பிரதிநிதிகள் விஜயம் செய்திட 22வது காங்கிரஸ்மகாசபை தாதாபாய் நவுரோஜி தலைமையில் கூடியது. 'நூற்றைம்பது வருஷ காலமாய் இயற்கைக்கு மாறான அரசியலுக்கே உட்பட்டிருக்கிறோம் ஒரு நாளாவது ஆங்கிலேயர் உட்பட்டிருப்பார்களா? இங்கிலாந்தில் ஆங்கிலேயருக்கு இருப்பது போன்ற உரிமை எல்லாம் இங்கே நமக்கு இருத்தல் வேண்டும். இது மிகவும் அவசியம் இல்லாவிட்டால் பரமதரித்திரம் தொலையாது. ஒரே வார்த்தையில் சொன்னால் நமக்குச் சுயராஜ்யம் வேண்டும் என்று தனது தலைமை உரையில் தாதாபாய் நௌரோஜி குறிப்பிட்டார். 18 அந்நியப்பொருள் பகிஷ்கரிப்பு தீர்மானம் 11 'காங்கிரசின் நாக்கு' என்று பெயர் பெற்ற விபினசந்திரபாலர் சுதேசி பொருட்களை ஆதரிப்பதோடு, விதேசிப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்து கல்கத்தா காங்கிரசில் பேசிய போது சென்னை மாகாண மிதவாதிகள் தலைவர் வி.கிருஷ்ணசாமி ஐயர் அந்நியப்பொருள்களைப் பகிஷ்கரிப்பதை உங்கள் வங்க மாகாணத்தோடு வைத்துக்கொள்ளுங்கள். சென்னை மாகாணத்தவரிலே ஒருவர் கூட அதைச் செய்யமாட்டார் என்று ஆவேசத்துடன் கூறினார். கல்கத்தா காங்கிரசிலே அன்னியப் பொருள் பகிஷ்காரத்தீர்மானம் முன் மொழியப்படும் முன்பு சென்னை மகாணப்பிரதிநிதிகளை தனியாக கூட்டிவைத்து அன்னியப் 18.எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், காங்கிரஸ் சரித்திரம், 1935, பக் 136. 13
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை