பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்சொன்ன தாக்குதல்களுக்கு மறுப்பளித்து பாரதி எழுதியுள்ளார். விபினசந்திரபாலர் சென்னையில் சில இரகசிய அறைக் கூட்டங்களையும் நடத்தினார். இவற்றில் பாரதியும், மண்டயம் சீனிவாசனும் முதலில் கலந்து கொண்டனர். இரண்டாம் சுற்றுக்கூட்டத்தில் ஆர்யா, சக்கரை, நீலகண்டன், துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முதல் சுற்றுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்ற அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் பாரதி பெற்றிருந்தார். கண்டன ஊர்வலங்கள் பாலபாரத சங்கத்தின் சார்பில் 14.9.1907 சுதேசிய ஊர்வலம் நடத்தப்பட்டது. மூர்ச்சந்தையிலிருந்து கடற்கரை வரை நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் 1500 பேர்கள் கலந்துகொண்டனர். 12.9.1907 இல் விபினசந்திரபாலரைக் கைது செய்ததைக் கண்டித்தும் நடத்தப்பட்ட கண்டன ஊர்வலத்தில் கைவினைஞர்களும், சிறுகடைக் காரர்களும், பெருமளவில் கலந்து கொண்டனர். ஊர்வலங்களின் முடிவில் நடத்தப்பட்ட கூட்டங்களில் கலந்துகொண்டு பாரதி உரையாற்றினார். 1907 சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்திட சென்னை கடற்கரையில் பாலபாரத சங்கத்தின் சார்பில் கூட்டம் ஏற்பாடானது. கடற்கரைக் கூட்டம் 6.10.1907ல் சென்னை கடற்கரையில் பாலபாரத சங்கத்தின் சார்பில் காங்கிரஸ் மாநாட்டிற்கு பிரிதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் கூட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. தலைமையில் நடைபெற்றது. பேச சூரத் காங்கிரசில் தீர்மானங்களை வலியுறுத்திப் கே.வெங்கடரமணராவ், சி. சுப்பிரமணியபாரதி, வீரத்தலைவர் வ.உ. சிதம்பரம்பிள்ளை, சி. செல்வராஜ் முதலியார், சக்கரை செட்டியார் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை வ.உ.சி அவர்களே முன்மொழிந்தார்கள். அவையில் இருந்த சிலர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பெயரும் அதில் சேர்க்கப்படவேண்டும் எனக் குரல் கொடுத்தனர். இந்தச் சமயத்தில் பாரதியார் எழுந்து நின்று அதற்குஎதிர்ப்பு தெரிவித்தார். முன்பு ஒரு கூட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியர்கள் சுயராஜ்யம் அடைய வேண்டும் என சுப்பிரமணிய ஐயர் பேசியதைச் சுட்டிக்காட்டிய பாரதியார் ஜி.சுப்பிரமணிய ஐயரின் பெயர், நேஷனலிஸ்ட் பட்டியலில் இடம் பெறக்கூடாது என்று கூறினார். 25.பெ.சு.மணி, புதிய விழிப்பின் முன்னோடி ஜி.சுப்பிரமணிய ஐயர், 1987 பக்.55. 16