7.12.1907இல் பாரதி தலைமையில் சென்னையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் வ.உ.சி.சுதேசியம் குறித்துப் பேசினார். 8.12.1907 இல் சூரத் மாநாட்டு வேலைகள் தொடர்பாக திருவல்லிக்கேணி நாடக மன்றத்தில் ஏற்பாடு செய்து கூட்டத்தில் சூரத் மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி பாரதி உரையாற்றினார். மாநாட்டுப் பிரதிநிதிகளின் பயணச்செலவை மண்டயம் சீனிவாசனும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யும் ஏற்குமாறு செய்து மாநாட்டுப் பணிகளை தீவிரமாகச் செய்தவர் பாரதி. சூரத் காங்கிரஸ் 1907 சூரத்தில் தபதி நதிக்கரையில் விஸ்தாரமான பந்தலில் இருபத்து. மூன்றாவது காங்கிரஸ் மகாசபை 1907 டிசம்பர் 26ஆம் தேதிபகல் இரண்டரை மணிக்கு கூடியது. 1400 பிரதிநிதிகள் அப்போது விஜயம் செய்திருந்தனர். ஸ்ரீஐத் திரிபுவனதாஸ் மால்வி வந்திருந்தோரை வரவேற்று உரையாற்றினார். அம்பாலால் தேசாய் எழுந்து காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு பாபுராஷ்விகாரி கோஷின் பெயரை முன்மொழிந்தார். கூட்டத்தில் 'கூடாது கூடாது' என்ற ஆரவாரம் எழுந்தது; குழப்பம் ஏற்பட்டது; கூட்டம் மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 1907 டிசம்பர் 27 பகல் 1 மணிக்கு காங்கிரஸ் மகாசபை மீண்டும் சூரத்தில் கூடியது. ராஷ்விகாரிகோஷ் ஊர்வலமாக பந்தலுக்கு அழைத்துவரப்பட்டார். இந்த வேளையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வந்து, திலகர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை திருபுவனதாஸ்மால்வியின் கையில் கொடுத்தார். திலகரின் திருத்தப் பிரேரணை அக்ராசனர் பிரேரேபணையை ஆமோதித்து பாபு பானர்ஜி பேசி முடிந்தவுடன், காங்கிரஸ் நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், தான் கொண்டுவரப்போகும் திருத்தப் பிரேரணை ஒன்றை அனுமதிக்க வேண்டுமென்றும் திலகரால் அதில் கோரப்பட்டிருந்தது. சுரேந்திரநாத் பானர்ஜி தனது பிரசங்கத்தை முதல்நாள் நிறுத்தின இடத்திலிருந்து துவங்கிப் பேசி முடித்தார். பண்டித மோதிலால் நேரு அக்ராசனப் பிரேரேபணையை ஆதரிக்க எழுந்து பேசி முடித்ததும் 17
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை