அவசியமாகிறது. அரசியல் களத்தில் பிரகாசித்த காலத்தில் பாரதி தமிழகத்தின் குரலை எதிரொலித்தார். அதனைத்தான் வ.ரா. அவர்களின் 'தமிழ்நாடு தான் பாரதி" என்ற வரிகள் உணர்த்திக் கொண்டிருக்கிறது.பாரதி தன்னையே தமிழகமாக ஆக்கிக்கொண்டார் என்றால் காங்கிரசில் அவரது ஈடுபாடு என்று தனியாக பிரித்துப் பார்த்திட இயலாத அளவில் அவர் அரும்பணியாற்றினார். பாரதி உயிருடன் வாழ்ந்த போது அவரது பாடலால் காங்கிரஸ் வளர்ந்தது. அப்போதும் பாரதியை காங்கிரஸ் மறந்தது. வறுமையில் வாடி வதங்கி பாரதி மறைந்தபோது அவரது படத்தின் மூலமும் காங்கிரஸ் வளர்ந்தது. இருந்தும், இறந்தும் காங்கிரஸிற்கு உரமாகத் திகழ்ந்தவர் பாரதி. ஆனால் பாரதியின் சொந்த வாழ்வில் அவரது அரசியல் போர்க்களத்தில் அவர் சந்தித்த சோதனைகள், அனுபவித்த வறுமைகள் இவை எந்த அரசியல் இயக்கத்தோழனுக்கும், தளபதிக்கும் வரக்கூடாத ஒன்றாகும். அறிஞர் அண்ணா போற்றிய கவிஞர் மகாகவி பாரதி குறிப்பிட்ட காலங்களில் புயலெனச்சுற்றி சுற்றி பணியாற்றினார். சில வேளைகளில் தனது வாழ்நாளை அமைதியாக கழித்தார்; வறுமையில் வாடினார்; வளமான கவிதைகளை வார்த்துக் கொண்டே இருந்தார். காங்கிரஸ் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பின்விலகிப் போனார்; தனியானதொரு சிகரமாகத் திகழ்கிறார். அத்தகைய பாரதியைப் போற்றுவோம். "நாட்டில் பாரதி காட்டிய பாதையை நாடு நன்கு அறிய வேண்டும். பரங்கியை ஓட்டிவிடுவது மட்டுமல்ல அது; நாட்டின் கேட்டுக்குக் காரணமான உள்ள அனைத்தையும் ஒட்டி புதிய சமூக அமைப்பாக்கும் பாதை அந்தப் பாரதி பாதையை நாம் போற்றுவோம்' என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறிய கருத்தை நம் சிந்தையில் ஏற்று நடைபோடுவோம்.2 அறியாமையை அகற்றிட மடமையை நீக்கிட பகுத்தறிவைப் பரப்பிட புதிய வாழ்வு பெற்றிட மறுமலர்ச்சிக்கு வித்திட்ட 11 மகாகவி பாரதி போதித்த பாடல்களை எண்ணிச் செயல்படுவோம். 42. மகாகவி பாரதியார் - அண்ணாத்துரை பாரதிதாசன் 1948 பக். 40. 32
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை