பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ண அலைகள்... பாரதி வாழ்க்கையில் நிகழ்ந்த காங்கிரசோடு தொடர்புடைய நிகழ்வுகளிலும், கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் காங்கிரஸ் தொடர்புடைய தலைவர்கள் பற்றியும், செய்திகள் பற்றியும், பாரதி எழுதியுள்ளவற்றை கருத்தில் கொண்டு, "காங்கிரசும் பாரதியும் என்ற கட்டுரையை அனுப்ப வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 5.12.95ல் பாரதியார் பற்றிய கட்டுரைப்போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்காக அடியேன் அனுப்பிய கட்டுரையே இச்சிறுநூல். பாரதி உயிரோடு இருந்தபோதே அவரை கைவிட்டது அன்றைய காங்கிரஸ்; பாரதி பற்றிய கட்டுரைப் போட்டியை அறிவித்து விட்டு, ஆண்டுகள் பல கடந்த பின்பும் அதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் பாரதி பற்றிய கட்டுரையை கைவிட்டது இன்றைய காங்கிரஸ். பாரதி பற்றி எத்தனையோ நூல்கள் தமிழில் வெளிவந்த போதிலும், பாரதிக்கும் காங்கிரசுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறியும் வண்ணம் கட்டுரைப் போட்டிக்காக அனுப்பிய அந்த விவரங்களை இச்சிறுநூலாக்கி உங்கள் முன் வைக்கிறேன். வி எனக்கு உறுதுணையாக இருந்துவரும் இருந்துவரும் எனது மைத்துனர் S.M.A.Q.ஜெய்லானி, எனது துணைவியார் திவானிஜஹானரா, அண்ணன் ஐ.சாமுவேல், S.N.சுப்பையா, பாளை மு. அருணாசலம், தி.நஜாத், தி.சுஹைனா, புக் ரவி, புக் மணி,சகோதரர்கள் D.V. தங்கசாமி, P.S.முத்து, ப. கல்லத்தியான், செ. இப்ராகிம், செ. இஸ்மாயில், செ. அசன், கா.சுப்பிரமணியன், நூலை நல்ல முறையில் அச்சிட்டுத்தந்த அண்ணன் எம்.சாகுல் ஹமீது, (கனி ஆப்செட்) ஆகியோர் எனது நன்றிக்கு உரியவர்கள். இதுபோன்ற எனது முயற்சிகள் வெற்றி பெற இறைவன் அருள் புரிவானாக. செ.திவான், கல்வித்தந்தை சுலைமான் இல்லம், 106 F5, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை - 627 002. 0462-572665