பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடப்பதாகவும்' நான் அறிய வந்தேன் என்ற தொ.மு.சி.யின் கருத்தினை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஊணர் செய்த சதி கி.பி 1888இல் எட்டயபுரத்தில் ஆங்கிலப்பள்ளியில் கல்வி பயின்றவர் பாரதி. பின்னர் பாரதி 1894இல் நெல்லைநகர் இந்துப்பள்ளியில் ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்தார்; அந்த வேளையில்தான் பாரதியின் தந்தையின் ஆலைத்தொழில் ஆங்கிலேயர்களால் சின்னாபின்னமாக்கப் பட்டது. தனது ஸ்வசரிதையில் 21வது பாடலில் 66 நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன்” என்று சொல்லிய பாரதி 39வது பாடலில் “ ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர் எய்தி நின்றனன், தீய வறுமையான்; ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியிலிழந்தனன் 5 என்று தனது தந்தை வறுமை எய்தியதுபற்றிக் குறிப்பிடுகிறார். 1906 செப்டம்பர் 25இல் மேலைநாட்டுக் கவி வடிவத்தில் தான் எழுதிய "சந்திரிகை" என்ற கவிதையில் சில சொற்களுக்குப் பொருள் எழுதிய பாரதி, ஊணப் புலவன் என்பதற்கு ஆங்கிலப் புலவன் என்று விளக்கம் தந்துள்ளார்.6 எனவே ஆங்கிலேயர் (ஊணர்) செய்த சதியினால் தான் பாரதியின் தந்தை தனது தொழில் முயற்சியில் தோல்விகண்டு, செல்வம் முற்றும் இழந்து வறியவரானார் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆங்கிலேயர்-புலைஞர் 1897 ஜனவர் 27 ஆம் நாளில் பதினான்கு வயதான பள்ளிப் பாலகன் பாரதி எட்டயபுரம் மன்னருக்கு தனது பள்ளிப் படிப்பைத் தொடர பண உதவி கேட்டு அகவற்பா வடிவில் விண்ணப்பம் அனுப்புகிறார்.' 4. ரகுநாதன், பாரதி, காலமும் கருத்தும், 1982, பக் 42. 5.டி.வி.எஸ்.மணி, சீனி விசுவநாதன், பாரதியார் கவிதைகள், 1992, பக் 237. 6.பெ. தூரன், பாரதி தமிழ், 1986 பக். 108 - 109 7.சி.விசுவநாதன் வெளியிட்ட கவிதை கலைமகள், ஆகஸ்ட் 1974 7