பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசன நடை போலேதான் இருக்கும். எதுகை மோனே, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனே யில்லாத கவிதைதான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனல், தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை. வால்ட் விட்மான், கவிதையை பொருளில் காட்டவேண்டுமே யல்லாது சொல்லடுக்கில் காட்டுவ அதி பிரயோஜனமில்லை யென்று கருதி, ஆழ்ந்த ஒசை மாத்திரம் உடையவாய், மற்றப்படி வசனமாகவே எழுதி விட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தான்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு ஸ்மான பதவி யுடையவராக மதிக்கிருரிகள்.

குடியாட்சி, ஜனதிகாரம் என்ற கொள்கைக்கு மந்தி, ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிரு.ர்கள்.

எல்லா மனிதர்களும், ஆணும் பெண்ணும் குழந்தை களும் எல்லாரும் ஸ்மானம் என்ற ஸத்யத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.

ஸ்ர்வ ஜகத்தும் ஒரே சக்தியை உயிராக உடையது ஆதலால், எல்லாம் ஒன்று. ஆதலால் பயத்தைவிடு பிறருக்குத் தீங்கு செய்யாதே. மற்றப்படி யெல்லாம் உன் சொந்த இஷ்டப்படி நடந்துகொள். எல்லாரும் ஸ்மானம் யாருக்கும் பயப்படாதே. கடவுள் ஒருவருக்கே பயப்பட வேண்டும். மனிதர் கடவுளைத் தவிர வேருென்றுக்கும் பயப்படக்கூடாது. இதுதான் அவருடைய மதத்தின் முக்கியமான கொள்கை. எல்லாரும் பரஸ்பரம் அன்பு செய்யுங்கள் என்ற கிறிஸ்துவின் போதனையை அவர் கவிதையாக பல வகைகளில் சொல்லியிருக்கிரு.ர். இந்த மஹான் ஒரு நகரம் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத தில் ஆணும் பெண்ணும் சபதத்தில் துஞ்சார். அங்கே