பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

துன்பமென்று நம்பினல், அது துன்பமாகத்தான் முடியும் இந்த உலகம் இன்பம். இதிலுள்ள தொழில், வியாபாரம் படிப்பு, கேள்வி, வீடு, மனைவி, மக்கள் எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக்கிருன் விதிப்படி நடப்போர் இந்த ஸ்கங்களை நன்முக அனுபவி கிறார்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன் மடைகிரு.ர்கள்.

23. உடம்பு

(குறிப்பு: ஒல்லியான உடம்பு: ஷர்ட், கோட் என்று போட்டுக் கொண்டு பாரதியார் தெம்பாக நடந்தாலும், கொஞ்சம் தள்ளினல் விழுந்து விடுவார்.

“உடல் படுத்துக் கொண்டது. உடலை வைரம் போல உறுதி உடையதாகவும், பகதிகளைப் போல லாகவமுடையதாகவும், சிங்கத்தைப் போல் வலிமையுடையதாகவும் செய்யவேணும். உடல் வசப்படாவிட்டால் இந்த உலகத்திலே வாழ் க் ைக பெருந்துன்பந்தான். உடம்பே எழுந்துட்காரு, உடம்பு எழுந்து விட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்து விட வேண்டும்’ என்று சித்தக்கடலிலே 1915 ஜூலை 1ஆம் தேதி பாரதியார் எழுதுகிரு.ர்.

“மகனே’ உடல் வெற்றி கொள். அது எப் பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம், நீ தேவன்; அது யந்திரம், நீ யந்திரி” என்றும் தொடர்ந்து எழுதுகிமுர். உடலினை உறுதி செய்