பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIV

புரட்சிகரமான மாறுதல்களை எதிர்பார்ப்பது முடியாது. ஜாதி என்ற ஒரு எண்ணம் எவ்வாறு ஆழமாகவோ ஊன்றியிருக் கின்றது என்பதைக் கீழ்வரும் பாரதியாரின் வாக்கிலே அறிய லாம். ஜாதிக்குழப்பம் என்ற கட்டுரையில் அவர் கூறுகின்றார் : ஒரு யானையைக் கொடுமையாக அடித்ததை பாரதியார் கவனிக்கிறார். ஏன் அப்படி அடிக்கிறாய் என்று கேட்டதற்கு அவன் கூறுகின்றான். இந்த யானை கீழ்ஜாதி யானை, யானைகளில் ப்ரம்ம, rத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக்களிருக் கின்றன. அவற்றுள் இது சூத்திர ஜாதியைச் சேர்ந்த யானை. மனிதர்களில் சூத்திரர்களுக்குள் ஈழுவர் என்ற ஜாதியர் இருக் கிறார்களே, அதே மாதிரி இந்த யானை வீரன் வகுப்பைச் சேர்ந் தது..... இங்ஙனம் அந்த மாவுத்தன் நீண்ட கதை சொன்னன். நான் இந்த விஷயத்தை இங்கு எடுத்துச் சொல்லியதின் நோக்கம் யாதெனில், நம்மவர்கள் மனத்தில் இந்த ஜாதிக் கொள்கை எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டேயாம். யானையை எடுத்தால், அதில் ப்ரம்ம, கூடித்திரிய, வைசிய, சூத்திரர். குதிரையிலும் அப்படியே! வானத்திலுள்ள கிரஹங்களிலும் அதே மாதிரிபரம்ம rத்திரிய முதலிய ஜாதி பேதங்கள் இரத்தினங்களிலும் அப்படியே!

இங்ஙனம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸ்ஹோதரத்வம் என்னுங் கொள்கைகளை நிலை நிறுத்துவதென்றால் அது ஸாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம் நுளை நூற்றெட்டாம்! ஆதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும் நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும், பறையன், பள்ளன் சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள், ஒன்றுக்கொன்று பத்திபோஜனம் கிடையாது. பெண் கொடுக்கல் வாங்கல் கிடை யாது. கேலி, கேலி, பெருங்கேலி.

இந்த மனநிலையில்தான். பாரதியாரின் அரிய நண்ப ராகிய குவளையூர் கிருஷ்ணமாசாரியார் என்பவர், ஒரு சமயம்