பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

உணவு

இரண்டாவது, நல்ல உணவு தேடி உண்ண வேண்டும். சுத்தமாகவும் ருசியாகவும் வயிறு நிறைய உணவு கொள்ள வேண்டும். “மிகினும் குறையினும் நோய் செய்யும். நமது தேசத்து ஜனங்களுக்கு உணவைக் குறைக்கும்படி உபதேசஞ் செய்தல் அவசியமில்லை. உணவு மிகுதியால் நோய்ப்படும் கூட்டத்தார் நமது தேசத்திலில்லை. உணவுக் குறைதான் இங்கே யிருக்கும் ஸங்கடம். ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்ற ஆங்கில சாஸ்திரி கல்வியைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக் கிறார், அதிலே குழந்தைகளுக்கு ஊண் மிகுதியால் உண்டாகும் நோய்களைக் காட்டிலும் ஊண்குறைவால் உண்டாகும் நோய்களே மிகவும் கொடியன என்று சொல்லு கிறார் ஊண்மிகுதிக்கு இயற்கையிலே மாற்றுண்டு. ஊண் குறைவுக்கு மரணந்தான் மாற்று. ‘உண்டவன் உரஞ் செய்வான். பரிசுத்தமான உணவுகளை நிறைய உண்ணு கல் வேண்டும் இனிய பழங்கள் நாள்தோறும் உண்ணத்தக்கன உணவுக்குப் பணம் எந்த உபாயத்தாலேனும் தேடிக் கொள்ள வேண்டும். ேத க த் தி ேல உழைப்பும் மனத்திலே தைரியமும் இருந்தால் பணந்தேடுவது கஷ்டமில்லை. சோம்பேறியாக ஒருவன் நிறையப் பணததை குவித்து வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்து ஜனங்கள் பட்டினி கிடந்து சாவதைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கொடிய பாவம்.

செல்வர் கடமை நமது நாட்டுச் செல்வர்கள் இவ்விஷயத்தைக் கவனிக்கவேண்டும். உன் சொத்தை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, நீ ஏழையாக வேண்டுமென்று நான் சொல்லவில்லை. கைத்தொழில்களும் வியாபாரங் களும் ஏற்படுத்தி அக்கம் பக்கத்தாரிடம் சரியானபடி