பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

ஜாதி என்ற நினைப்பே கூடாது. எவன் தன்னை எப்படி நினைத்துக்கொள்கிருனே, அவன் அப்படியே ஆய் விடுகிருன். நாம் மேல் ஜாதியாரை வெல்லவேண்டு மானுல் மேன்மைக் குணங்கள் பழகிக் கொள்ளவேண்டும். படிப்பினல் மேன்மை யடையலாம்.” இங்ஙனம் ஸ்ரீமான் சங்குண்ணி தீயருக்கு நல்ல நல்ல உபதேசங்கள் செய்தார்.

38. செல்வம்

(குறிப்பு : பாரதியாரின் சமூக சீர்த்திருத்தக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் இந்நூலில், அவர் செல்வத்தைப்பற்றி எழுதிய கட்டுரை யைச் சேர்க்காவிட்டால், இந்நூல்நிறைவுபெற்ற தாகாது. ஆனல் இரண்டு பகுதியாக வெளியான இக் கட்டுரை ‘பாரதியும் உலகமும் என்ற எனது நான்காவது நூல் வரிசையில் முன்பே வெளி வந்துள்ளது. எனினும் 1917 நவம்பர் 28-இல் வெளியான முதற்பகுதியிலிருந்து ஒரு சிறு பகுதி இங்கு தருகின்றேன். முழுமையாக எனது பாரதி நான்காம் நூலில் கண்டு கொள்க. இந்நூல் மிகவும் விரிவாகிவிடும் என்று எண்ணியே இவ்வாறு செய்கின்றேன்.

சோஷலிஸ்க் கொள்கையைப் பாரதியார் பெரிதும் ஆதரிக்கிறார் என்றாலும், இக் கட்டுரை யின் இரண்டாம் பகுதியில் அவர் எழுதியுள் ளதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அவர் எழுதுகிறார் : “இந்த ஸித்தாந்தம் பரிபூரண ஜயமடைந்து மனிதருக்குள்ளே