பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

திட்டத்தை வகுக்க முடியாது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே முக்கியம். எளிய தமிழில் சொல்லித் தரவேண்டும், இயன்ற இடத்தி லெல்லாம் தமிழ்ப்பெயர்களை வழங்கவேண்டும், என்றும் அவர் கூறியுள்ளதை நன்கு மனத்திற் கொள்ளவேண்டும். அன்று பாரதியாருக்குக் கிடைத்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளதையும் நோக்க வேண்டும்.)

தேசீயக் கல்வி (1) தேசமென்பது குடிகளின் தொகுதி. இது கொண்டே

நமது முன்னேர் குடிக்கட்டுகளினின்று விலகி நிற்போரைப் பரதேசிகள் என்றனர் போலும்.

குடும்பக் கல்வி

தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்.

வீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும் வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்யன்: வீட்டி: பொறுமையுடையவன் நாட்டிலும் பொறுமையுடையவன் மனைவியின் பெருளைத் திருட மனந்துணிந்தோன் கோயி) பணத்தைக் கையாடக் கூசமாட்டான். தான் பெற்) குழந்தைகளுக்கிடையே பகடிபாதஞ் செய்பவன் ஊர்: நியாயாதிபதியாக நியமனம் பெறத்தக்கவன் ஆகமாய் டான். குடும்பம் நாகரீகமடையாவிட்டால், தேச நாகரீகமடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடி தேசத்தில் விடுதலை இராது.

ஒரு குடும்பத்தார் கூடித் துன்பமில்லாமல் வாழ்வன காட்டுமிருகங்களும் பிற மனிதரும் தடுக்காத வண்ணம் ஆதியில்.மனிதர் காட்டை அழித்து வீடுகட்டினர்கள். வீடுகள் கூடி, ஊர் ஆயிற்று.