பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆல்ை, குணங்கள், செயல்கள், நிலைமைகள்-இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது. பதார்த்தங்களின் .ெ ப ய ர் க .ே மாத்திரமே இங்கிலீஷில் சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.

நுட்பமான விவரங்கள் கற்றுக்கொடுப்பதற்குத் தகுந்த பாட புஸ்தகங்கள் தமிழில் இன்னும் ஏற்பட வில்லையாதலால், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், உபாத்தி யாயர்கள் இங்கிலீஷ் புஸ்தகங்களைத் துணையாக வைத்துக் கொண்டு, அவற்றிலுள்ள பொதுப்படையான அம்சங்களை மாத்திரம் இயன்றவரை தேசபாஷையில் மொழி பெயர்த்துப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிது கற்பித்தால் போதும்.

திருஷ்டாந்தமாக, ரஸாயன சாஸ்திரம் கற்பிக்கு மிடத்தே:

(அ) உலகத்தில் காணப்படும் வஸ்துக்களெல்லாம் எழுபதே சொச்சம் மூலப்பொருள்களாலும், அவற்றின் பலவகைப்பட்ட சேர்க்கைகளாலும் சமைந்திருக்கின்றன (திருஷ்டாந்தங்களும், சோதனைகளும் காட்டுக.)

(ஆ) அந்த மூல பதார்த்தங்களில், பொன், வெள்ளி செம்பு, கந்தகம் இவைபோல வழக்கத்திலுள்ள பொருள் கள் இவை; க்ரோமியம், தித்தானியம், யூரேனியம் இெை போல ஸாதாரண வழக்கத்தி லகப்படாதன. இவை கனரூபமுடையன இவை, திரவருபமுடையன இவை வாயுருபமுடையன இவை, இவற்றுள் முக்கியமான மு: பதார்த்தங்களின் குணங்கள் முதலியவற்றை எடுத்து காட்டுக.