பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

தொகைகளாகவும் சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடை களாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும் எளிதான காரியம்.

இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேக உடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல் கிராமத்தாரனவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்த வேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுக்கப் படு வோரும், ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக ஸ்பையாகச் சமைத்து, அந்த ஸ்பையின் முலமாகப் பாட சாலையின் விவகாரங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நிர்வாக ஸ்பையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர் தவிராமல் அத்தனை பேருக்கும் சீட்டுப் போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும்.

இத்தகைய கல்வி கற்பதில் பிள்ளைகளிடம் அரையனுக் கூடச் சம்பளம் வசூலிக்கக் கூடாது. தம்முடைய பிள்ளே களுக்குச் சம்பளங்கொடுக்கக்கூடிய நிலைமையிலிருந்து: அங்ஙனம் சம்பளங்கொடுக்க விரும்புவோரிடம் அத் தொகைகளை நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மிகவும் ஏன்ழகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும், வஸ்த்ரங் களும், இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆண்மக்களுக்கு மட்டுமின்றி, இயன்றவரை பத்து வயதுமட்டுமேனும் பெண்குழந்தைகளும் வந்து கல்வி கற்க ஏற்பாடு செய்யலாம். அங்ஙனம் செய்தல் மிகவும் அவசியமாகவே கருதத் தகும். ஆனால், ஜனங்கள் அறியாமையால் இங்ஙனம் பெண்குழந்தைகளும் ஆண்