பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இப்படிப் செய்வதிலும் எத்தனையோ தொல்லைகள் இருக்கின்றன. ஒரே வழி. அதுதான் பாரத ஜாதி என்று அமைப்பதே ஆகும்.

இன்னும் பரந்த முறையில் பார்த்தால் பாரத ஜாதி என்பதும் தவறு. மானிட இனம் ஒரே ஜாதி. அதுவே குறிக்கோளாகக் கொள்ளத் தக்கது.

இவ்வுலகம் ஒன்று,

ஆண், பெண், மனிதர், தேவர்.

பாரதியார் வசனகவிதையில் கூறும் இந்தக் குறிக் கோளை அடைய முயல்வோம். மற்றவை தாமா கவே வரும்.)

சாதுர் வர்ண்யம்

சென்ற காங்கிரஸ் ஜனஸ்பை லக்நெள நகரத்தில் கூடிக் கலைந்த பிறகு, ஸ்ரீமான் லோகமான்ய பால கங்காதர திலகர் தமது இஷ்டர்களுடன் கான்பூருக்கு வந்தார் அங்கு ராமலீலை நாடகவெளியில் பதினையாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டம் ஒன்று கூடி அவரை ஸ்வராஜ்ய போதனை செய்யும்படி வேண்டினர்கள். ஸ்வராஜ்ய பேச்சுக்கிடையே அவர் ஜாதிக்கட்டை முறித்துச் சொல்லிய சில வார்த்தைகளை இங்கு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.

திலகர் சொன்னர் :- ‘பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு