பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

நமது தற்காலப் பிரிவுகளைக் கண்டிக்கிறார். புராதன தர்மமே பின்பற்றத்தக்கது. ஹிந்துக்களாகிய நாமெல் லோரும் இவருடைய உபதேசப்படி நடந்தால் நன்மை யுண்டாகும். இப்போதுள்ள ஜாதி விரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும் மேன்மையுண்டாகும்.

ஏனென்றால், எல்லாச் செய்கையும் ஈசனுடைய செய்கை. சோம்பர் ஒன்றுதான் இழிவு; அதுதான் சண்டாளத்தனம். எந்தத் தொழிலையும் நேரே செய் வோர் மேன்மக்கள்.

ஒருவன் தான் பிராமணகை வேண்டும் என்று கருதினால், அவன் உண்மை ஆராய்ச்சியே முதற்காரியமாகக் கொண்டு வாழக்கடவான். கடித்திரிய பதவி வேண்டு மால்ை, தன்னுயிர்க்கிரங்காமல் மன்னுயிரைக் காப்பதே விரதமாகக் கொண்டு வாழக்கடவான். இங்ஙனமே மற்ற வையும் கொள்ளுக. குணத்தாலும் தொழிலாலும் ஏற்படுகிற மேன்மையைக் கண்டு யாரும் பழிகூற இடமில்லை. குணத்திலும் தொழிலிலும் கடைப்பட்ட ஒருவன் பிறப்பைக் காரணமாக வைத்துக்கொண்டு, “நான் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று சொல்லும் போது, மற்றவருக்குக் கோபம் உண்டாகிறது.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்” என்று, தாம் வள்ளுவர் மரபில் பிறந்தாலும் நமது மு ன் ேன ரா ல் பிரமதேவனுடைய அவதாரமென்று போற்றப்பட்ட திருவள்ளுவ நாயனர் சொல்லுகிரு.ர். ஒருவன் குணகர்மங்களால் பிராமணனுக இருப்பாளுகில் அவனுக்கு நாட்டில் முதலாவது மதிப்புண்டாதல் பொதி வாக எல்லாத்தேசங்களிலும் இயற்கையாக நடந்து வரும் நெறி. ஏனென்றால் எல்லா தொழில்களுக்கும் சாஸ்திாே