பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

நமது ஜன ஸ்மூகத்தில் மாறுதல்கள் நடக்க வேண்டும்.மாறுதலே உயிர்த்திறமையின் முதற்குறியாகும். மேன்மேலும் செளகரியத்தை விரும்பித் தானகவே புதிய புதிய மாறுதல்கள் செய்து கொள்ளாத ஜந்துவை இயற்கைத்தெய்வம் வலியவந்து கீழ்நிலைமைக்கு மாற்றுகிறது. புராதன ஆசாரங்களில் நல்லதைக் கடைப்பிடித்துக் .ெ க ட் ட ைத நீக்கிவிட வேண்டும். பழமை என்ற ஒரே காரணத்தால் எல்லாம் நல்லதாய் விடாது.

மேலும், விவாக சமயத்தில் சொல்லப்படும் சில வேத மந்திரங்களைக் கொண்டே, பிராமணர்கூட ருதுவான பிறகுதான் பெண்களுக்கு மணம் செய்வித்தார்கள் என்று பூர்மான் ஸ்ரீநிவாச சாஸ்திரியார், தாம் அவ்விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே புத்தகமொன்றில் ருஜுப்படுத்தி யிருக்கிறார். ஆகவே குழந்தைக் கலியாணம் வேதோக்தம மென்றும் தெய்வக்கட்டளை என்றும் இவர் நம்பவில்லை. இடைக்காலத்தில் நம் ஜாதியார் அறிவும், தைரியமும், சக்தியும் இழந்துவிட்ட பிறகு வந்து நுழைந்த அசம்பா வித வழக்கங்களில் இது வொன்றென்பது ஸ்ரீநிவாச சாஸ்திரியாரின் கொள்கை. இந்தக் கொள்கையை நமது நாட்டில் எத்தனையோ ஜனங்கள் மனதிற்குள்ளே அங்கீகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்ஙனம் ஒப்புக்கொண்ட பிறகும் புதிய சீர்திருத்தத்தை நடை முறையிலே கொண்டு வருவதற்குத் தைரியமில்லை.

பொதுவாக இங்கிலீஷ் படித்தவர்களிலே பலரும், இங்கிலீஷ் படிக்காவிட்டாலும் விஷயங்களைத் தாமாகவே யோசனை செய்து பார்க்கும் வழக்கமுடைய வேறு பலரும், நமது ஜனக்கட்டிலே எத்தனையோ குற்றங் குறைகள் இருப்பதாக ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனல் அவனவனுக்கு நியாயமாகத் தெரிந்ததை