பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

அவனவன் தனது அனுஷ்டானத்தில் காட்டும் முறைமை நமது நாட்டில் நன்முக ஏற்படவில்லை. தர்மத்துக்காகத் தாங்கள் ஸங்கடப்படுவதிலே பெரும்பாலோருக்கு ஸ்ம்மத மில்லை. அதுவும் இங்கிலீஷ் படித்த கூட்டத்தாரில் மனேதைரிய முடையவர்களின் தொகை மிகவும் சொற்ப மென்பது என்னுடைய அபிப்பிாாயம். உள்ளும் புறமும் ஒன்று போல நடக்க வேண்டும். படித்த வித்வான்கள் வஞ்சக நடை நடந்தால் அந்தத் தேசம் சூன்யமாகிவிடும். மனே தைரிமில்லாவிட்டால் பயனுடைய செய்கை எதுவுமே செய்ய முடியாது.

விதி வசத்தால் நமது ஜனங்களுக்கு இந்த rணத்திலே பலவிஷயங்களிலும் வழிகாட்டக்கூடிய திறமை இங்கிலீஷ் படித்த சிலரிடத்திலேதான் காணப் படுகிறது. அதற்குக் காரணம், பூமண்டலத்தின் சாஸ்திரங் களும் நவீன யோசனைகளும் நமது பாஷையில் மொழி பெயர்க்கப்படாமல் இருப்பதொன்று; நம்மவர் அன்ய தேசங்களில் யாத்திரை செய்து தற்கால அனுபவங்கள் திரட்டிக் கொண்டு வராமலிருப்பது இரண்டு; நமக்குள் வந்து புகுந்திருக்கும் கோரமான வறுமை மூன்றாவது.

எனவே, இந்தக் கூட்டத்தாரில் சிலர் கொஞ்சம் துணிவாகச் செய்கைகள் செய்வதைக் காணும் போது, ஆரம்பத்தில் சொல்லியபடி எனக்கு ஸ்ந்தோஷமுண்டா கிறது. இப்படி நம்மவர் எல்லா விஷயங்களிலும் நியாயத் தைத் துணிவுடன் செய்து காட்டி நாட்டில் புதிய உயிரை நிலை நிறுத்தும்படி தேவர் கருணை செய்க.

|