பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி

பேணி வளர்த்திடும் ஈசன்: மண்ணுக் குள்ளே சிலமூடர்-கல்ல

மாத ரறிவைக் கெடுத்தார்’

இந்த நோக்கில் தான் பாரதியாருடைய பாடல்களையும் வசனங்களையும் தூரன் அவர்கள் ஆராய்கிறார்கள். பெரும் பாலோருக்குத் தெரியாத பல விஷயங்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அவ்வப்போழுது பாரதியாரைப் பற்றி வெளிவந்த நூல்களில் இவை காணப்படுவது உண்மைதான் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து இவற்றைத் தொகுத்து இப்பொழுது தூரன் அவர்கள் நமக்கு வழங்கு கிரு.ர்கள். இவற்றைப் படித்து சுமார் 60,70 ஆண்டுகளுக்கு முன்னுல் பாரதியார் எழுதியது நம்முடைய இன்றைய சமுதாயத்தின் நிலைக்கும்கூடப் பொருந்தும் என்பதை உணரும் பொழுது ஆச்சரியமே யுண்டாகும். ஆனல் எந்த உண்மைக் கவிஞனும் ஒரு தீர்க்கதரிசியே என்பதை உணரும்பொழுது இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்பது தானகவே புலப்படும். உலக வாழ்க்கையின் பயனைப்பற்றியும், மனிதன் எதற்காகப் பிறந்தான் என்பதைப் பற்றியும் பேசுகின்ற பாரதியார், ஜப்பான் நாட்டினுடைய தொழிற் கல்வியைப் பற்றியும், இந்திய நாட்டிற்குத் தேவையான தேசீயக் கல்வியைப் பற்றியும் எழுதத் தயங்கவில்லை. இப்படியெல்லாம் இவர் எழுதியிருப்பதைப் படிக்கும்பொழுதுதான் இன்று வாழ்வதைப் போல வாழ்கின்ற காலம் ஒன்று வரும் என்று முன்கூட்டியே எதிர்பார்த்து, அதற்காக அவர் நம்மை எச்சரித்து வழிகாட்டி யிருக்கிறார் என்று சொல்லவே தோன்றும். உண்மையில் பாரதியாருடைய கருத்திலும், எழுத்திலும் அகப்படாத சமுதாய வாழ்க்கையின் அம்சம் எதுவுமேயில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு, அவருடைய வசனமும், கவிதையும் எல்லாவற்றையும் உள்ளடக்கியவையாக அமைந்திருக்கின்றன