பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yii

பாரதியாருடைய படைப்புக்களை இந்தக் கோணத் திலிருந்து நாம் படிப்பதற்கு பெரியசாமித் தூரன் அவர்கள் பேருதவி செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பக் காலத்திலிருந்தே பாரதியாரின் படைப்புக்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் தூரன் அவர்கள். பாரதியாருடைய படைப்புக்கள் அனைத்தையும் படித்து, அவற்றைப் பலவாருகத் தொகுத்து வெளியிட்டிருப்ப துடன், அவற்றைப் பற்றித் தம்முடைய குறிப்பையும், கருத்துக் களையும் அவ்வப்பொழுது வெளியிடவே செய்திருக்கிறார்கள். அத்தகைய பணியினுடைய ஒரு பகுதியாக இந்நூல் அமைந் திருக்கின்றது. தம் உடல்நிலை முழுமையான நலத்துடன் இல்லாதவிடத்துங்கூடத் தம்முடைய கவனத்தை இத்துறையில் அவர்கள் செலுத்தினர்கள் என்பதே, பாரதியாரிடத்தில் அவர்களுக்கு எத்தகைய ஈடுபாடு இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தப் போதுமானது. அவர்களுடைய இந்த நூலே தமிழுலகம் பெரிதும் வரவேற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, தமிழ் மக்கள் இதைப் படித்துப் பலன் பெற்று சமூகச் சீர்திருத்தத்திற்காக பாரதியார் வெளியிட்ட கருத்துக்களை ஆழ்ந்து கூர்ந்து கவனித்து, அவை நிரந்தரமான பலனைத் தரக்கூடியவை என்பதை உணர்ந்து, வெறுமனே பாரதியாரைப் புகழ்வதோடு நின்றுவிடாமல், அவருடைய கருத்துக்களைத் தங்களுடைய வாழ்க்கையில், அனுபவத்தில் கொண்டுவர முயல்வார்கள் என்று எதிர்ப்ார்க்கிறேன். அப்படியே வேண்டிக்கொள்ளவும் செய்கிறேன்.

சென்னை, 24-7-1980 மு. மு. இஸ்மாயீல்