பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

அதற்கு முன்பு தனித்தனி ஜமீன்தார்களிடத்திலும் சிறு சிறு முதலாளிகளிடத்திலும் வேலை செய்த தொழிலாளி கள் தத்தமக்கு நேரும் குறைகளே தத்தம் இடத்துக்கும் ஸ்திதிக்கும் தக்கபடி கெஞ்சியும் முணுமுணுத்தும் சில ஸ்மயங்களில் சிறு கலகங்கள் நடத்தியும் தீர்த்துக் கொண்டார்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தான் யந்திரங்களின் சத்தியால் தொழில் செய்யும் முறைமை மிகுதியுற்றது. அப்போதுதான் அங்குள்ள தொழிலாளிகள் முதலாளிகளுக்கெதிராகக் கிளர்ச்சி நடத்தும் வழக்கத்தை கைக்கொள்ளலாயினர். நாட்பட நாட்பட, யந்திரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட துணி முதலியன. ஐரோப்பாவினின்று ஆசியா முதலிய இதர கண்டத்து ஜனங்களினிடையே அதிகமாக விற்கப்பட லாயின. இங்கிலாந்து முதலிய தேசத்தார் தம் நாடு களுக்கு வேண்டிய துணிகள் முதலியனவேயன்றி உலக முழுமையிலும் கொண்டு விற்கவேண்டுமென்ற நோக்கத் துடன் தாம் புதுமையாய்க் கண்டுபிடித்த பூதசக்திகளாகிய நீராவியையும், மின்சாரத்தையும் கொண்டு வேலை செய் வாராயினர், இதல்ை உலகத்துச் செல்வம் மேன்மேலும் ஐரோப்பாவிற்குச்செல்ல இடமுண்டாயிற்று. அதினின்றும் ஆரம்பத்திலே பல தொழிலாளிகள் வேலையிழந்து அங்கு பட்டினி கிடக்க நேர்ந்த துன்பத்துக்குத் தக்க நிவாரண முண்டாய் அந்த நிவர்த்தி மேன்மேலும் மிகுதிப்பட்டு வந்தது.

அதற்கு முன் இருந்த ஜன ஸ்முக வரம்புகளும் நியதிகளும் சிதறிப் போய்விட்டனவே யெனினும், பெரும் பாலும் தொழிற் கூட்டத்தாருக்கு வேலை கிடைத்து விட்டது. ஆசியாவிலும் பிற கண்டங்களிலும் லக்ஷம் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஐரோப்பியத் துணி சிே த லிய ன ஏற்றுமதியாகத் தலைப்பட்டதினின்றும்