பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 மாசுபடுத்தா திருக்க வேண்டும். அமங்கல வார்த்தை களும் அவச் சொற்களும், பய வசனங்களும் தீமை தரும். பரிபூர்ணமான தீரமும், வலிமையும், உண்மையும், திருத்தமும், தெளிவும் பொருந்திய வாக்கே தேவ வாக் கென்று சொல்லப்படும். மனித ஜாதிக்கு தேவ வாக்குப் பிறந்திடுக. ஸரஸ்வதியும் இலக்கியமும் உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்தில் தேவ வாக்கைத் தோற்றுவித்து, நமது வேள்வியைக் காக்கும் என்பது கண்டோம். இலக்கியக் காரருக்கோ வென்ருல், இத்தெய்வமே குலதெய்வம். அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை மோனைகளுக்காகச் சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கட்ா கrத்தை இழந்து விடுவான். யமகம் திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டு போகும் கயிறு பின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கிருன். அவசிய மில்லாத அடைமொழிகள் கோப்போன் அந்த தெய்வத் தின் மீது புழுதியைச் சொரிகின்ருன். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித்துணியாலே மூடுகின்ருன். வெள்ளைக்கலை" யுடுத்துவதில்லை. மணமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரக் காரனும் பாட்டுக்காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில் லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடைய வாக்கே அருள் வாக்கென்று சொல்லப்படும். வேதரிஷிகளின் கவிதை