பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I17 மகன் உடலும் இரண்டு துண்டமாகக் கிடந்ததைப் பார்த்து, அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியடைந்தாள் என்று ஒர் பாடல் இருக்கிறது. இன்னும், அதுபோல எத்தனையோ ஆச்சரியமான திருஷ்டாந்தங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இடம் போதாமைபற்றி அவற்றை இங்கே எடுத்துக் கூற முடிய வில்லை. இவ்வளவு மேலான வீரப்பயிற்சி இருந்த நாடு இப் போது என்ன நிலைமைக்கு வந்துவிட்டது! ஆனல், நமக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது. அதுவும் வீனன ஆறுதலன்று. உண்மை பற்றிய ஆறுதல். அந்த ஆறுதல் யாதெனில், நமது ஜாதியை இடையே பற்றிய சிறுமை நோய் விரைவிலே நீங்கி விடும் என்பதற்கு ஆயிரக்கணக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பரிசுத்தமான நெஞ்சமும் தெய்வ பக்தியும் தன்னல மறப் பும் உடைய பல மேலோர்களை இப்போது நாட்டிலே காண் கிருேம். இது வீணுக மாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புன்னேய் சிக்கிரத்திலே மாறிப்போய்விடும். வானத்திலே துந்துயியொலி அதிரக் கேட்கின்ருேம். மகாபாரதம் (Great india) பிறந்துவிட்டது. வ்ந்தே மாதரம்.