பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ls) ஆங்கில ஆட்சியிலே ஆங்கிலம் படித்த தமிழனுக்கு உயர் பதவிகள். அவன் தனது சுயதர்மத்தை மறந்தான். நீதி மன்றங்கள் ஆங்கிலத்தில் நீதி செலுத்தின. வழக் குரைஞர்கள் ஆங்கிலத்தில் பேசித் தமிழனை மயங்க வைத் தார்கள். பொது மேடைகளிலே ஆங்கிலத்தில் பேசுபவ னுக்குத்தான் மதிப்பு. தமிழ் அங்கே தலைகாட்ட முடியாது. பள்ளிகளிலே தமிழ் இரண்டாம், மூன்ரும் இடத்தைப் பெற்றது. படிப்பெல்லாம் ஆங்கிலத்திலே. மொழியாக்கம் என்று ஏதோ ஒப்புக்குப் பாடத்திட்டத்திலே இடம் பெற்றது. பனைமரம் என்பதைப் பூனைமரம் என்று எழுதி விட்டால் செம்பாதிக்கு மேல் தேர்வு அம்சம் கிடைத்து விடும். தமிழ்ால் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஒரே சுதி யில் ஆங்கிலம் கற்றவர்கள் முழங்கினர்கள். தமிழ்ப் புலவர்கள் வாய்திறக்கவில்லை. யமகம், திரிபு, மடககு. நாகபந்தனம் என்று கவிகள் பாடித் தம் புலமை யைக் காட்டினர்கள். அப்படிப் பாடுவதே கவிதை: அப்படி எழுதுவதே எழுத்து என்று நினைத்தார்கள். தமிழ்ப் புலவர்கள் ஒரு தனி ஜாதியாக ஒதுக்கப்பட்டார் கள். அண்டர் புகழும் ஆடுசாபட்டியில் அவதரித்தவர் களாக அவர்கள் கருதப்பட்டார்கள். பள்ளியிலே தமிழ் வகுப்பு நகைப்புக் கிடமாயிற்று. தமிழ் என்ருலே உதாசீனம். ஆனல் இந்த அவல நிலைக்கு மத்தியிலும் தமிழின் பெருமையை உணர்ந்த ஒரு சிலர் இருக்கவே செய்தார்கள்.