பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i: இந்தப் பின்னணியிலே பாரதியார் சென்னையில் பத்திரிகை ஆசிரியராகத் தோன்றினர். முதலில் சுதேச மித்திரனில் வேலை பார்த்தார். பிறகு இந்தியா வார இதழுக்கு ஆசிரியரானர். பாரதியார் சென்னைக்கு வந்தது தமிழருக்கும், தமிழ கத்திற்கும், பாரத தேசத்திற்கும் நல்ல காலம். இந்த நூலிலே பாரதியார் தமிழர்களுக்கும், தமிழகத் திற்கும் ஆற்றிய இணையற்ற சேவையை ஒரளவு எடுத்துக் காட்ட முன் வந்துள்ளேன். தாழ்வு மனப்பான்மையில் விழுந்து கிடக்கும் தமிழர் களை அவர்களுடைய பெருமையை உணர்ந்து வீறுகொண்டு எழுவதற்கு அவர் ஓங்கிய குரல் கொடுத்தார். செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுதுகாதினிலே என்று முழங்கிஞர். தமிழா, கவனி. தமிழகம் ஒப்பற்றது. -செல்வம் எத்தனையுண்டு புவிமீதே-அவை யாவும் படைத்த தமிழ்நாடு என்று மேலும் முழங்கினர். தமிழா, கவனி! யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணுேம் யாமறிந்த புலவரிலே கம்பனப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்