பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இவ்வாறு இடித்துக் கூறினாலும் தமிழின் மேலும் தமிழர்களின் மேலும் பாரதியாருக்கு அளவில்லாத பக்தி யும், நம்பிக்கையும், பெ மையும் இருந்தது. தமிழ், என்னும் கட்டுரையிலே, மிகவும் விரைவில்ே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள் என்று பெருமிதத்தோடும், பெரு நம்பிக்கையோடும் முழங்குகிரு.ர். தமிழ் நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையில் உலகத் திலுள்ள மதபேதங்களையெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸ்மய ஸ்மரசக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானல், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலக முழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ் நாட்டில் தோன்றியிருக்கிருர்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்கு மென்கிருேம்' என்று பெருமையோடு கூறுகிரு.ர். பாரதியார் எழுதியுள்ள பாப்பாப் பாட்டை ஒவ்வொரு குழந்தையும் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது அத்தனை உயர்வானது அதிலே பாரதியார் பாடுகிரு.ர். "தமிழ்த்திருநாடுதன்னைப் பெற்ற-எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா' என்றும், "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்றும் உபதேசம் செய்கிரு.ர்.