பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l, 6. 1. செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சி னிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே. (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர் வீரம் செறிந்த தமிழ் நாடு-நல்ல காதல் புரியும் அரம்பையர் போல்-இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு. (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்ட தோர் வையை பொருனை நதி-யென மேவிய யாறு பல வோடத்-திரு மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்) முத்தமிழ் மாமுனி நீள் வரையே-நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டு புவி மீதே-அவை யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்) நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று நித்தந் தவஞ் செய் குமரி யெல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்)