பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 7. 8. 9. 10. 11. 12. 29 கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்றன் காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் என்னென்ன வோபெய ருண்டு-பின்னர் யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர். தந்தை அருள்வலி யாலும்-முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கணமட்டுங் காலன்-என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். இன்ருெரு சொல்வினைக் கேட்டேன்!-இனி ஏது செய்வேன்! எனதாருயிர் மக்காள் கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் ! "புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவுங் கூடுவதில்லை-அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ ! இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவி ரெட்டுத்திக்கும்-கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்குசேர்ப்பீர்! தந்தை யருள்வலி யாலும்-இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும்-புகழ் ஏறிப் புவியிசை யென்று மிருப்பேன்.