பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலுந் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழச் சாதி தடியுதை யுணடும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொருது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ள தம் நாட்டினைப் பிரிந்த நலிவினுற் சாதலும் இஃதெலாங் கேட்டு மெனதுள மழிந்திலேன்: "தெய்வ மறவார், செயுங்கடன் பிழையார், ஏதுதாஞ் செய்யினு மேதுதான் வருந்தினும் இறுதியில் பெருமையு மின்பமும் பெறுவார்" என்பதென்னுளத்து வேரகழ்ந் திருத்தலால். எனினும், இப்பெருங் கொள்கை யிதய மேற் கொண்டு கலங்கிடாதிருந்த வெனக்கலக் குறுத்தும் செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்:ஊன மற்றெவைதாம் உறினுமே பொறுத்து, வானம் பொய்க்கின் மடிந்திடு முலகுபோல், தானமுந் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி, சாத்திரங் கண்டாய் சாதியி னுயிர்த்தலம்; சாத்திர மின்றேற் சாதி யில்லை. பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள் பொய்மை யாகிப் புழுவென மடிவர். நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில், அறிவுத் தலைமை யாற்றிடுந் தலைவர்