பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 தென்றும் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக் களஞ்சியமே யாகுமென்றும் ஒளவையார் குறிப்பிட்டருளினர். இனி இன்பத்துக்கு ஒளவையார் கூறும் இலக்கணமோ நிகரற்ற மாண்புடையது. காதலின்பத்தையே முன்னேர் இன்பமென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளைச் சேர்ப்பதிலும் அறத்தைச் செய்வதிலும் தனித்தனியே பலவகையான சிறிய சிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும், இன்வ. காதலின்பத்துக்குத் துணைக்கருவிகளா வது பற்றியே ஒருவாறு இன்பங்களென்று கூறத் தக்கன வாம். உலகத்தில் மனிதர் ருசியான பதார்த்தங்களே உண்டல், நல்ல பாட்டுக்கேட்டல், நல்ல மலர்களே முகர்தல் முதலிய இந்திரிய இன்பங்களை விரும்பி அவற்றை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிரு.ர்கள். அதிகார இன்பம், புகழின்பம் முதலிய எண்ணற்ற வேறு பலஇன்பங் களுக்காகவும் உழைக்கிரு.ர்கள். ஆனல், இவையெல்லாம் அற்பமான இன்பங்களென்று கருதி முன்னேர் இவற்றை இன்பப் பாலிலே சேர்க்கவில்லை. புகழ், அதிகாரம் முதலிய வற்றை அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் சார்ந்தன வாக கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனிய பகrணங்களையும் கணிகளையும் உண்டல், மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகார மில்லாதனவு மாதல் பற்றி அவற்றையும் இன்பப் பாலிலே சேர்க்கவில்லை. 'கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடிக் கண்ணேயுள’ என்று திருவள்ளுவர் பாடியிருக்கிருர், 'கண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளிபொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தே