பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 யில் தேசம் இருக்கிறது. இந்தப் பிரமாணஸ்தர்கள் தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிருர்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிருர்கள். காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் க்தை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிரு.ர். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், காமா சோமா என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினல், கொஞ்சம் சம்மானம் கிடைக்கிறது. உண்மையான தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி 'பிரமாணஸ்தர்' தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தி யார்களும்-தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டுமென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில் தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்ாதன மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளு கிறேன். اس-د t r