பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 ராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிர மணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான் களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதி கர்த்தாக் களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான், வங்கம், மஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்து மாகா ணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன. பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணே விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ்நாடு முதலாவது கண் விழித்தது. ஆனல், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணே விழிப்பதும் கொட் டாவி விடுவதுமாக இருக்கிறது. ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானல், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையா ளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிட லாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஒரடையாளமாகக் கருதத்தகும். ஆனல் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, 'ஆஹா இப்படிப்பட்ட தமிழ் நாடு எங்கே பிழைக்கப்போகிறது?" என்று எண்ணி, பாழும் நெஞ்சு உடைந்துபோகவேண்டாம், ஏ.ெஎன்ருல், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக் கிய கருவியன்று, பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்: சென்ற முப்பது வருஷங்களாகத்தான் தெரிந்து கொண்