பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டிருக்கிருேம். இன்னும் சரியாக முதிர்ச்சி அடையவில்லை. தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிருர்களோ அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனல் பத்திரி கைகளுக்குத் தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும். தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. தமிழ் முழு நாகரீக முடையதா, இல்லையா என்பதைப் பற்றி சந்தேகங்களு டையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸ்ந்தோஷமடைந்திருக்கும் இயல் புடையது. தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதியர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று. எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதே சியக் ககதியைச் சேர்ந்தது. ஆனல் தக்க பயிற்சியில்லாதவர் களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழு தப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் "போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு ககதி ஏற்படுத்தி நமது நேசக் ககதிக்கு விரோதம் செய்வதாக வும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்ருகிய மாக்ஸிமிஸ்த் ககதிக்கு