பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தமிழில் சாஸ்த்ர பரிபாஷை பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சி களிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லெளகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக் கிருர்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களே யெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற் காக ஒரு பண்டித - சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்ப தாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக் கூடும். அஸ்திவாரக் காரியம் இதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது: ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழுவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன. அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொது வழக்கமில்லாத சொல்