பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு முத்துக்கள் மகாகவி பாரதி, தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி யும், தமிழ் நாட்டின் உயர்வைப் பற்றியும் தமிழ் மக்களின் நலனைப் பற்றியும் சொன்ன கருத்துக்களை 'பாரதியும் தமிழகமும்’ என்ற தலைப்பில் செந்தமிழ்ச் செல்வர் திரு. பெரியசாமித் தூரன் அவர்கள் தொகுத்துத் தந்துள் ளார்கள். இதற்குப் பைந்தமிழ்க் கவிஞன் பாரதியின் கவிதைகளும், காவியங்களும், கட்டுரைகளும், வசன கவிதைகளும். உரை நடையும் தொகுப்பாசிரியர் தூரன் அவர்களுக்கு மிகவும் பயன்பட்டிருக்கின்றன. பாரதி நம் தாய்மொழி வளர்ச்சி குறித்தும் நாட்டின் நலன் குறித்தும் மக்களின் மேம்பாடு குறித்தும் எவ்வளவு கவலைப்பட்டிருக்கிருன்; உளம் உருகிப் பாடியிருக்கிருன் என்பதை இந்நூலைப் படித்தால் போதும். ஆயிரக் கணக்கான பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடிய விஷயங்களை இச்சிறு நூலிலே தொகுப்பாசிரியர் தூரன் அவர்கள் பாரதியின் உள்ளத்தை நமக்குத் தெளிவாக விண்டு காட்டுகிரு.ர். மாகவிஞன் பாரதியின் கவலைகளும், கனவுகளும், கருத்துக்களும் தமிழ் நாட்டு மக்களின் உயர்வுக்கு நிச்சயம் பயன்படும் என்று கருதி இந்நூலை வெளியிட்டுள்ளோம். இம்மாதிரி பாரதியின் கருத்துக்களை வரிசைப்படுத்தி சிறு சிறு நூல்களாக வானதி பதிப்பகத்தில் வெளியிடவும் எண்ணியுள்ளோம். பாரதியின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்துத்தர தமிழறிஞர் திரு. தூரன் அவர்கள் இசைந்துள்ளார்கள்.