பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வேதங்களே நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களே.வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள்போல் நடந்து கொள்ளாதே. தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதை கள் மிதமிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீகக் கொள்கைகள், வைதிக நடை-எல்லாவற்றி லுமே பொய்கள் புகுந்து தலைதுாக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளி யிலும். தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்கவேண்டும்; உண்மையிருக்க வேண்டும் நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்கவேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங் களுக்கெல்லாம் வேர் உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணுடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய். தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய்’ என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண் மைக்கும் எதிரிடையாக ஒர் கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? "தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிருர்கள்” என்று பஞ்சதந்திரம் நகைக் கிறது. இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரி யோர்கள் காட்டியிருக்கிருர்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு-என்பன.