பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. தமிழ் நாட்டு மாதருக்கு இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண் மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளி நாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒரு உபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்தியா நாகரீகக் குறைவான தேசம்’ என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பர்வியிருந்தது. மேற்றிசையோர்களுக் குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள் (அதாவது ஞானசாஸ்திரங்கள்); காளிதாஸன் முதலிய மஹா கவிகளின் காவியங்கள்; ராமாயணம், பாரதம்; பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள்-இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய், அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரை யாகவே நிகரற்ற ஞானத் தெளிவும் நாக்ரீகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர். இங்ங்ணம் மேற்கு தேசங்களில் பதினுயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய் தனர். எனினும், அந் நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்' என்ற பொய்க் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும் பின்னிட்டு ரவீந்திரநாத தாகூர், ஜகதீச சந்திர வஸ்முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்த பின்னரே, மேற்றிசைவாசிகளில் பலர், அடாl