பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நாகரிகத்தையும் விழுங்கி ஜீர்ணித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலால் ஐரோப்பிய நாகரிகத்தின் கலப்பிலி ருந்து ஹிந்து தர்மம் தன் உண்மையியல்பு மாரு திருப்பது மட்டுமேயன்றி முன்னைக் காட்டிலும் அதிக சக்தியும் ஒளி யும் பெற்று விளங்குகிறது. இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்கு உணர்ந்து கொண்டாலன்றி இவர் களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம் நன்கு நடைபெருது...... தமிழ் நாட்டு ஸ்ஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலானவர்களால் நன்கு மதிக்கப் பெருமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.

  • மான மிழந்தபின் வாழாமை முன்னினிதே. கல்வி கூட அத்தனை பெரிதில்லை, தைரியம் வேண்டும். எதுவரி னும் நம்மைப் பிறர் தாழ்வாகக் கருதவும் தாழ்வாக நடத் தவும் இடங்கொடுக்கக் கூடாது என்ற மன உறுதி வேண்டும்.

ஐரோப்பிய நாகரிகத்தின் புறத்தோற்றங்களிலே ஆrே பத்துக்கு இடமான அம்சங்கள் பலவும் இருக்கின்றன என் பதில் ஸ்ந்தேகமில்லை. ஆனுல் இது வியக்கத்தக்க தொரு செய்தியன்று. நமது ஸ்நாத ஹிந்து தர்மத்தின் புறநடை களிலே கூடப்பல வெறுக்கத்தக்க அம்சங்கள் வந்து கலந்து தான் கிடக்கின்றன. அதுபற்றி ஐரோப்பிய நாகரிகத் தையே வெறுத்தல் சாலமிகப் பேதமையாம்...... ஆகவே, பூமி முழுமைக்கும் பெருந்துணையாக நின்று மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றக் கூடிய ஹிந்து மதத்தின் ஸார உண்மைகளை நாம் ஒழுக்கத்திலே காண்பிக்க வேண் டும். இங்ங்ணம் காண்பிக்கும்படி நம்மவரைத் தூண்டி வழிகாட்டும் கடமையும், தகுதியும் நம்முடைய மதங் களுக்கே உரியன.