பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தமிழில் எழுத்துக் குறை T ஸ்ம்ஸ்க்ருதம், ஹிந்தி, பெங்காளி, மஹாராஷ்ட்ரம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம்: மலையாளம், முதலிய மற்ற பாரத பாஷைகளிலெல்லாம் வர்க்க எழுத்துக்கள் உண்டு. அதாவது, க.ச.-ட-த-ப என்ற ஐந்து வல்லெழுத்துக் களில் ஒவ்வொன்றுக்கும் நான்கு வேறுபாடுகள் இருக் கின்றன. திருஷ்டாந்தமாக : வடசொல் பொருள் 1. பரம் மேலானது 2. பலம் (ப Ph)) பயன் 3. பலம் (ப = b) வலிமை 4. பாரம் (ப = bh) ఊ;థ) LB வெவ்வேறு எழுத்துக்களே முதலாகக் கொண்ட இந்த நான்கு சொற்களையும் தமிழில் வழங்கி வருகிருேம். ஆனல், "எல்லி செட்டிலெக்க ஏகலெக்க' என்பது போல எல்லா வற்றிற்கும் ஒரே 'ப' தான் போடுகிருேம். ஆளுல் ஸம்ஸ்க்ருதச் சொற்களே ஸம்ஸ்க்ருத வழக்கப் படி நாம் உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லையாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவதில்லை யென்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். சரி, நியாயமென்று வைத்துக் கொள் வோம். வெளிநாட்டு ஊர்களின் பெயர்களையும் மனிதர்களின் பெயர்களையும் நாம் சரியானபடி சொல்ல வேண்மாடு,