பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முடியாமலும் போய்விடுமென்று அவர்களுக்கு அச்சமுண் டாயிற்று. தொல்காப்பியர் கட்டின ஆரிச்சுவடி போதாத வண்ணமாக நமது பாஷை வளர்ச்சி பெற்றவுடனே நமது முன்னேர்கள் மேற் காட்டிய எழுத்துக்களையும் சேர்த்தார் கள். நாமும் அப்படியே நமக்கு இக்காலத்தில் ஏற்படும் உச்சரிப்புக் கஷ்டங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு, கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கலாமென்று சில பெரியோர் கருதுகிருர்கள். ஆனால் அதைக் காட்டிலும் அடையாளங் கள் போடுவது சுலபமான வழி. இப்போதுள்ள அரிச்சுவடியிலே பழகிய தமிழருக்கு மேற்படி அடையாளங்களால் எவ்வித ஸங்கடமும் நேரி டாது. தப்பாகவோ, சரியாகவோ வழக்கம்போல வாசித் துக்கொண்டு போவதை அடையாளங்கள் தடுக்க மாட்டா. கிரந்த எழுத்துக்களைக் கொண்டு சேர்த்தால் பாதி படிக்கும் போதே நிறுத்திவிட நேரிடும். ப்ரெஞ்ச், இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷை களிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலும் -உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து செளகர்யப் படுத்திக் கொள்ளுகிருர்கள். இதல்ை எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டு மென்பதே என்னுடைய விருப்பம்.