பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள் (பி. ஏ. பரீட்சை தேறிய ஒரு வாலிபனுடைய எண்ணங்கள்) வாலிபன் தமிழ்ப் பாஷை ஒன்றுக்கும் பிரயோ ஜனமில்லை. இது சீக்கிரம் அழிந்தால்தான் நமது நாடு பிழைக்கும். புலவன் : ஏதப்பா, உனக்கு இந்தப் பாஷையிலே இவ்வளவு கோபம் உண்டாயிருக்கின்றது? வா. நவீன நாகரிகத்தினுடைய சங்கதி உமக்குத்தெரி யாதையா மனித ஜாதி குரங்கு நிலைமையினின்றும் மாறிக் காட்டு மனிதன் ஸ்திதிக்கு வந்தபோது உங்கள் தமிழ்ப் பாஷை ஏற்பட்டது. இப்போது உலகம் எவ்வளவோ விசாலமடைந்து போயிருக்கிறது. வானத்தில் உள்ள கிர கங்கள், நrத்திரங்கள் முதலியவற்றை யெல்லாம் மனித அறிவு ஊடுருவிச் சென்றிருக்கிறது. பதார்த்தங்களின் அணுக்களிலே எல்லாம் மனுஷ புத்தி நுழைந்து சென்றி ருக்கிறது: பிரகிருதி வினேதங்களே மனிதன் எவ்வளவோ அதிகமாக ஆராய்ச்சி செய்திருக்கிருன். சமுத்திரத்து ஜலம் அனைத்தையும் குடத்துக்குள்ளே எப்படி அடைக்க முடியும்? அதுபோலவே அளவின்றி விரிந்து கிடக்கும் மனுஷ புத்தியின் நவீன சலனங்களை எல்லாம் உம் முடைய பண்டைக்காலத்துத் தமிழிலே கொண்டு துழைப் பது மிகவும் பிராணுபத்தாய் இருக்கின்றது. நாம் நாகரிகம் அடைய வேண்டுமாளுல் இந்தத் தமிழ் பாஷையை முற்றும் கைவிட்டு விட வேண்டும். புல : "நாம் என்று யாரையப்பா சேர்த்துச் சொல் கிருய்? உன் மட்டிலே நீ பேசுவதைப் பார்த்தால் ஞானக்