பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கனின் விலாஸம் பாட்டிலே காணப்படவில்கல. நல்ல பாட்டுப் பாடினல் நல்ல மதிப்புத் தானகவே வரும். அதி விருந்து நல்ல வரும்படி ஏற்படும். திருஷ்டாந்தமாக: ஹாஸ்ய ரஸம் தோன்றும்படி ஒரு ராகத்தை விஸ்தரிக்கும்போது, அதிலே அர்த்தச் சேர்க்கை யில்லா விடத்தும் ஜனங்கள் கடகடவென்று சிரிக்க வேண்டும். ரெளத்ர ரஸம் தோன்றும்படி பாடினல், அதைக் கேட்கும்போது, ஜனங்களுக்கு மீசை துடிக்க வேண்டும்; கண்கள் சிவக்கவேண்டும். வீர ரஸ்முள்ள பாட்டை ஒரு வித்வான் பாடும்போது, ஜனங்களெல்லாம் தம்மை யறியாமல் முதுகு நிமிர்ந்து தலைதுாக்கி உட்கார வேண்டும். அவர்கள் விழியிலே வீரப் பார்வை உண்டாக வேண்டும். அப்போதுதான் பாட்டு ஸபலமாகும். பொருளிலும், ஒசையிலும் ரளம் கலக்காத பாட்டு இனிமேல் தமிழ் நாட்டிலேயே வழங்கலாகாது. முத்துசாமி தீகநிதர், தியாகையர், பட்டணம் சுப்பிர மணிய அய்யர்-இந்த மூன்று பெயருடைய கீர்த்தனை களைத்தான் வழக்கத்தில் அதிகமாய்ப் பாடுகிருர்கள். இவற்றுள்ளே, திகதிதரின் கீர்த்தனைகள் பச்சை ஸம்ஸ் கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதி யைப்போலே கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடை யன. வேறு பல நல்ல லக்ஷணங்களும் இருந்தபோதிலும், ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் இவை நமது நாட்டுப் பிொது ஜனங்கள் ரஸ்ானுபவத்துடன் பாடு வதற்குப் பயன்படமாட்டா.