பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழிசையின் ஞானத்தையும் அதஞல் ஏற்படும் ஆன்ம அமைதியையும் இழந்து வருகின்ருர்கன். நமது இசைவாணர் கள். தமிழர்களுக்குப் புரியாத மொழிகளிலே பாடிப் பாடி, மரபு வழி வந்த நமது இசையின் மீதே தமிழ்ச் சாதிக்கு வெறுப்பு ஊட்டிவிட்டார்கள். இன்று நடந்துகொண்டிருப் பதை ஞானதிருஷ்டியால் அன்றே கண்டு விட்டார் பாரதியார். தாம் கண்டதைப் பொருத்தில் அடித்த மாதிரி அல்லவா அவர் சொல்லிவிட்டார்:-"தமிழ்ச் சபுைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுகளை மீட்டும் மீட்டும் சொல்லுதல், நியாயம் இல்லை, அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்” என்று. நேரிடும் என்று சொன்னது இப்போது நேரிட்டுக் கொண்டிருக்கிறது. இசைக் கச்சேரிகளுக்குக் கூட்டம் வருவது இல்லை. ஆனல் மெல்லிசைக் கச்சேரிகளுக் கும், நாட்டியக் கச்சேரிகளுக்கும், நாடகங்களுக்குமே பெரும் கூட்டம் வருகிறது என்று சென்னையிலுள்ள சங்கீத சபா நிர்வாகிகள் பலரும் ஒருமனதாகச் சொல்லுகிரு.ர்கள். அப்படியானுல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழி யாகத் தமிழர்கள் அனுபவித்து வந்த இசையைத் தமிழர் களே இப்போது புறக்கணிக்கிரு.ர்கள் என்று தானே பொருள்? புறக்கணிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனல் அவற்றிலெல்லாம் முக்கியமான காரணம் தமிழர்களுக்குப் புரியாத மொழியிலே உள்ள இசைப் பாடல்களைப் பாகவதர் மாறிமாறிப் பாடி அவர்களுக்குக் கசப்பு ஏற்றியிருப்பதுதான். இசை ஞானத்தை மாத்திரம் நாம் இழந்துகொண்டிருக்க வில்லை. இதயக் கல்லைப் பிசைந்து கனியாக்கி அருள் வெள்ளத் தில் அமிழ்த்தும் இசைப் பயனகிய பக்தியையும் நாம் இழந்து வருகிருேம். இதையுணர்ந்த சில இசை மேதைகள். சங்கீதத் துக்குப் பாஷை அவசியமில்லையே. அதற்குத் தனித்து இயங் கும் ஆற்றல் இருக்கிறதே" என்று சொல்லி, தந்திரமாக நம்மைத் திசை திருப்பப் பார்க்கிரு.ர்கள். தந்திரிகளுக்கெல் லாம் மேலான தந்திரி ராஜாஜி; திசைதிருப்பிகளுடைய வாதத்துக்கு ராஜாஜி சொன்ன பதில் வருமாறு :