பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/3

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாக்மில்லன்
வண்ணக்கிளிகள்


பாரதியார் தமிழ்நாட்டை தட்டியெழுப்பி சுதந்திரப் போரில் ஈடுபடும்படி செய்தார் அவருடைய வாழ்க்கை வரலாற்றை குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம், அதோடு அவர் குழந்தைகளுக்காக எழுதிய பாப்பா பாட்டையும் கற்றுக் கொள்ளவேண்டும். அப் பாட்டில் பாரதியார் நமக்கு வேண்டிய பல நீதிகளைச் சொல்லியிருக்கிறார். ஆகையால் அதை மனப்பாடம் செய்துகொண்டு, அதன்படி நடக்கவேண்டும். அதற்கு இந்த புத்தகம் மிக நல்ல உதவியாக இருக்கும். படித்துப் பாருங்கள்.

ஆசிரியரைப் பற்றி

ம, ப. பெரியசாமித் தூரன் (பெ. தூரன்) குழந்தைகளுக்கும், சிறுவர் சிறுமியருக்கும் கதை சொல்வதில் புகழ் பெற்றவர். பல உயர்நிலைப் பள்ளிகளிலும், சென்னை வானொலியிலும் எத்தனையோ சிறுகதைகளும், நீண்ட, கதைகளும் அவர் சொல்லும்போது இளைஞர்கள் ஆவலோடு கேட்பார்கள். அவர் கூறிய கதைகளெல்லாம் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்குப் பாடல்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர். "நல்ல நல்ல பாட்டு" என்ற அவருடைய பாடல் தொகுப்பிற்குத் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கியுள்ளது. பரிசும், கேடயமும் வழங்கி குழந்தை எழுத்தாளர் சங்கமும் அவரை கௌரவித்துள்ளது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அவர் எழுதிய நூல்கள் ஐம்பதிற்கு மேலிருக்கும்.

விலை ரூ.5.00

ஓவியர்கள் : மாருதி, எஸ். கே. ராமானுஜம் (ரானு )

M

The Macmillan Company of India Limited

21 PATULLO ROAD, MADRAS 600 002