பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாப்பாப் பாட்டு

பாரதியாரின் இரண்டாவது குழந்தைதான் சகுந்தலா. இக் குழந்தையைப் பாப்பா என்று செல்லமாக அழைப்பார்கள். இது அழுத போதுதான் பாரதியார் பாப்பாப் பாட்டு என்ற அழகான பாடலைக் குழந்தைகளுக்கென்றே பாடினார். இந்த விவரங்களையெல்லாம் முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

பாப்பாப் பாட்டைப் பற்றித் தனியாக எழுதுவதாகவும் சொல்லியிருக்கிறேன் அல்லவா? அதைத்தான் இப்போது செய்யப் போகிறேன்.

குழந்தைகள் எப்பொழுதும் துருதுருவென்று ஓடியும் ஆடியும் இருக்க வேண்டும், அது ஓய்வாகச் சோம்பேறியாக இருக்கக் கூடாது. அது குழந்தைகளின் இயற்கை அல்ல.

31